FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 September 2015

பாமக 2016 தேர்தல் அறிக்கை : ஆசிரியர் & அரசு ஊழியர் சார்ந்த முக்கிய அறிவிப்புகள்!

முக்கிய அம்சங்கள்:
ஆசிரியர் & அரசு ஊழியர் நலன்:
*புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு
பழைய ஓய்வூதிய முறை
நடைமுறைப்படுத்தப்படும்.
*7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள்
நடைமுறைப்படுத்தப்படும்.
*இடைக்கால நிவாரணமாக அடிப்படை
ஊதியத்தில் 15% சேர்த்து வழங்கப்படும்.
*அகவிலைப்படியில் 50% அடிப்படை
ஊதியத்துடன் இணைக்கப்படும்.
*மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான
ஊதியம் வழங்கப்படும்.
*அனைத்து நிலை ஆசிரியர்களின் ஊதிய
விகிதத்தில் காணப்படும் முரண்பாடுகள்
களையப்படும்.
*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10
ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு
கிடைப்பது உறுதி செய்யப்படும்.
*பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும்
தற்காலிக ஆசிரியர்கள், அரசுத் துறைகளில்
பணியாற்றும் பகுதி நேர ஊழியர்கள் அனைவரும்
பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
*அரசு ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து சரி
செய்வதற்காக அரசுத்துறை செயலாளர்
தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும்.
கல்வி:
*கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின்
ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4% ஆக
அதிகரிக்கப்படும். அதாவது கல்விக்கு இப்போது
ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்படும்.
*மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும்
இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான
கல்விக் கட்டணத்தை அரசே
நிர்ணயித்துசெலுத்தும்.
*மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின்
பள்ளிகள்தரம் உயர்த்தப்படும். பள்ளிகளின்
தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு
மாவட்டத்திலும் ஒருபள்ளித் தர இயக்குனர்
நியமிக்கப்படுவார்.
*மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஆந்திரம்
மாநிலப் பாடத்திட்டங்களில் உள்ள சிறந்த
அம்சங்களை கண்டறிந்து அவற்றை உள்ளடக்கிய
புதியக் கல்வித் திட்டம் உருவாக்கப்படும்.
இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்படும்.
புதியக் கல்வித் திட்டம் 2017 ஆம் கல்வி
ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
*தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை
எதிர்கொள்ள வசதியாக 9&ஆம் வகுப்பிலிருந்தே
சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
*- அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும்,
தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும்
கணிணி ஆசிரியர்களும், பிற சிறப்பு
ஆசிரியர்களும் பணி நிலைப்பு
செய்யப்படுவார்கள்.
*தனியார் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு
இணையான ஊதியம் வழங்க வகை
செய்யப்படும்.
*திறன் சார் கல்வி முறை
அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11
ஆம்ஆண்டில் வழக்கமான பாடங்களுடன்
வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான
பயிற்சிப் பாடம் கூடுதலாக சேர்க்கப்படும். அது
மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக
இருக்கும்.
*பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும்
பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி
மேலாண்மை குழுக்களாக மாற்றப்படும்.
பள்ளியின் தேவைகள் தொடர்பான முடிவுகளை
எடுத்து செயல்படுத்தும் அதிகாரம்
வழங்கப்படும்.
*தமிழ் வழிக் கல்வி முறைக்கு முக்கியத்துவம்
அளிக்கப்படும்.
உயர்கல்வி:
*பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் திறன்சார்
கல்வி கல்லூரிகளுக்கும், பல்தொழில்நுட்ப
கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும். கல்லூரிப்
படிப்பு முடிக்கும் போது வேலைவாய்ப்பு
உறுதி செய்யப்படும்.
*ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு
பல்கலைக் கழகம் தொடங்கப்படும்.
*தமிழகத்தில் 6 ஒருமை பல்கலைக்கழகங்கள்
அமைக்கப்படும்.ஆராய்ச்சிகளை செய்வது
மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக
இருக்கும்.
*அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம்
ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு
சட்டக்கல்லூரியும் தொடங்கப்படும்.
*தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5
மண்டலங்களாக பிரிக்கப்பட்டு,
ஒவ்வொருமண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு
இணையான ஓர் உயர் தொழிட்நுட்ப கல்வி
நிறுவனம் அமைக்கப்படும்.
*பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்
அனைத்தும் அரசுக்கல்லூரிகளாக மாற்றப்படும்.
அவற்றில் குறைந்த தொகுப்பூதியத்தில்
பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு
ஊழியர்களாக்கப்படுவர்.

No comments:

Post a Comment