FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 December 2018

'நீட்' தேர்வுக்கான பதிவு நாளை மறுநாள் நிறைவு

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்விஆண்டு மாணவர்களுக்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்ததேர்வுக்கு, நவ., 1ல் விண்ணப்ப பதிவு துவங்கியது. ஆன்லைன்வழியில், நவ., 30ல் விண்ணப்ப பதிவு முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், பொது பிரிவினரில், 25 வயதுக்கு அதிகமானவர்களும், நீட் தேர்வில் பங்கேற்கலாம் என, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீட்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. அந்தகூடுதல் அவகாசம், நாளை மறுநாள் முடிகிறது.மாணவர்கள்முன்கூட்டியே திட்டமிட்டு, விண்ணப்பத்தை பதிவு செய்துகொள்ளுமாறு, மாணவர்களுக்கு நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வுமுகமை அறிவுறுத்தியுள்ளது .

No comments:

Post a Comment