FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 November 2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், ஒரு வாரம் அவகாசம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் ஆணை !

இடஒதுக்கீடு இல்லாதவர்களும் 30 வயது வரை நீட் தேர்வு எழுதலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு இல்லாதவர்கள் 25 வயது வரை நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால் பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதலாம்.. 

இது தொடர்பாக மாணவர்கள் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் மேற்கண்ட புதிய உத்தரவை வழங்கியுள்ளது. மேலும் வயது வரம்பு தளர்வுக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒருவார கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், ஒரு வாரம் அவகாசம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கோரிய நிலையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கவும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment