FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 November 2018

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு : தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால், அந்த ஊதிய உயர்வு கிடைக்காமலே ஓய்வுபெறும் நிலை இருந்து வந்தது. இதுதொடர்பாக அரசு அலுவலர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஓய்வுபெறும் மாதத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால் முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.  தற்போது ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் சுவர்ணா வெளியிட்ட அரசாணையில் (எண்.148) கூறியிருப்பதாவது:  



அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தாலோ, மரணம் அடைந்து விட்டாலோ அந்த அரசு ஊழியர்களுக்கு அந்த மூன்று மாத தொடக்கத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன் கூறுகையில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தால், கடைசி மூன்று மாதத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஊதிய உயர்வுக்கு ஓராண்டு ஆகியிருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, ஓய்வுபெறும் ஊழியர்கள் 10வது மாதத்திலேயே ஊதிய உயர்வு பெறும் நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்' என்றார்.

No comments:

Post a Comment