FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 December 2017

TET - அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TETலிருந்து விலக்கு தர தமிழக அரசிடம் கோரிக்கை.

அரசு பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தது போல பாரபட்சம் இல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் TETலிருந்து விலக்கு தர தமிழக அரசிடம் கோரிக்கை.

23/08/2010 க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக முறையான கல்வித் தகுதிகளுடன் பல ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையும் தமிழகத்தில் சற்றே தாமதமாக வெளிவந்தது.

 RTE விதிப்படி அமைந்த அரசாணை 181 தமிழகத்தில் 15/11/2011 ல் வெளியிடப்பட்டது.

ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் TET கட்டாயம் ஆக்கப்படுதல் தொடர்பாக தாமதமாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் செயல்முறைகள் அனுப்பப்பட்டு பின்னர் சம்மந்தப்பட்ட பள்ளிகள் வழியாக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியர்களுக்கும் பகிரப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் நான்கு TET தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளன.

இந்த இடைப்பட்ட காலங்களில் நீதிமன்றங்கள் வாயிலாகவும், அரசு உத்தரவு  வாயிலாகவும் பல ஆசிரியர்கள் TET லிருந்து முழு விலக்கு பெற்றனர்.

 அவர்களில்

1) 2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி நியமனம் பெற்றவர்கள்

2) 15/11/2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்கள்

3) அனைத்து வகை சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்கள் 

4) 15/11/2011 க்கு முன்பு CV முடித்து பிறகு பணி நியமனம் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்

-- உள்ளிட்ட 90% ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு கொடுக்கப்பட்டு விட்டன. 

தற்போது மிகக் குறைந்த அளவிலான (சுமார் 10%) TET நிபந்தனை ஆசிரியர்கள் மட்டுமே தமிழகத்தில் மீதம் உள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு வேலைவாய்ப்பக பரிந்துரை, நாளிதழ் விளம்பரம், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்கள், பள்ளி நிர்வாக தகுதித் தேர்வுகள், இன சுழற்சி,  அரசின் அனுமதி போன்ற பலதரப்பட்ட நிலைகளைக் கடந்து வென்று பள்ளி நிர்வாகம் வாயிலாக பணி நியமனம் பெற்றவர்கள் ஆவர்.

இவர்களின் TET முழு விலக்கு தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்து இருந்தனர்.

பல்வேறு ஊடகங்கள் இவர்களின் துயரங்களை எடுத்துக் காட்டின.

இந்த நிலைக்கு தீர்வு கேட்டு பல முறை தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கைகளை விடுத்தனர்.

இந்நிலையில் கடைசியாக TET நிபந்தனை ஆசிரியர்கள் ஒன்று கூடி மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரை ஈரோடு மாவட்டம் சென்று மனு கொடுத்து உள்ளனர். அப்போது இது சார்ந்த கோப்புகள் ஏற்கெனவே மாண்புமிகு அமைச்சரின் கவனத்தில் உள்ளதாகவும், விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்க வழி செய்யப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வளரூதியம், ஊக்க ஊதியம், பணிப்பதிவேடு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பல்வேறு தடைகளும் இந்த TET நிபந்தனைகளைக் காரணம் காட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்ட கல்வி அதிகாரிகள் நிறுத்தம் செய்துள்ளார்கள்.

தற்போது பரிந்துரைக்கப்பட்ட ஊதியக் குழுவில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த இந்த வகை ஆசிரியர்களின் பணிபுரிந்த காலத்தை கருத்தில் எடுக்காமல் இந்த மாதம் பணியில் புதிதாக சேருபவர்களுக்கு தரப்படும் ஊதியம் மட்டுமே கொடுக்க தன்னிச்சையாக கல்வி அதிகாரிகள் முடிவுகள் எடுத்து செயல்படுத்தி உள்ளனர்.  இது இவர்களை மேலும் காயப்படுத்தும் செயலாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளின் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுத்தது போல்  பாரபட்சமற்று அரசு உதவிபெறும் பள்ளி TET  நிபந்தனை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு TET லிருந்து விலக்கு அளிக்கும் பட்சத்தில் (சுமார் 300 ஆசிரியர்கள் ) இவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பது உண்மை.

No comments:

Post a Comment