FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 November 2017

மூன்று மாவட்டங்களில்பள்ளிகள் இன்று செயல்படும்

மழைக்கால விடுமுறையை ஈடுகட்ட, சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், இன்று பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழையால், சென்னையின் புறநகர், திருவள்ளூர், 
காஞ்சிபுரம் மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே, பள்ளிகளுக்கு, அவ்வப்போது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுவரை, ஐந்து வேலை நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறையை ஈடுகட்ட, சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டனர். அதன்படி, சனிக்கிழமையான இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது

No comments:

Post a Comment