FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 November 2017

ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன

இவற்றில், 63 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு பள்ளி களிலும், 37 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவி பள்ளிகளிலும் பணியாற்றுகின்றனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர், ஆசிரியர்கள் விகிதத்தில், அதிக முரண்பாடுகள் உள்ளன மாணவர்களை விட ஆசிரியர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை ஆய்வு நடத்தியுள்ளது

அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், போதிய மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை மட்டும் நியமித்து, தில்லுமுல்லு நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,500 ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது

தொடக்க கல்வி இயக்குனரக அனுமதியின்றி, மாவட்ட கல்வி அதிகாரிகள், புதிய நியமனங்கள் செய்வதோ, இடமாறுதல் வழங்குவதோ கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment