FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 November 2017

பள்ளி சுவர்களில் சித்திரம்:வரையும் பணிகள் ’விறுவிறு’

அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், தமிழகம் முழுவதும், 2,184 அரசுப்பள்ளிகளில், சுவர் சித்திரம் வரைய, கடந்த செப்டம்பர் மாதம், 3 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில், 132 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, சுவர் சித்திரம் வரையும் திட்டத்திற்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் விதம், 19.50 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது.

ஆங்கில வழி வகுப்புகள் கொண்ட அரசுப் பள்ளிகளில், இரண்டு வகுப்பறைகளில் சித்திரங்கள் வரைய அறிவுறுத்தப்பட்டது. ஆங்கில வார்த்தை உச்சரிப்பு பயிற்சிக்காக, தாவரங்கள், விலங்குள், பறவைகள், அன்றாட நிகழ்வு சார்ந்து, 16 சுவர் ஓவியங்கள் வரைய மாதிரி படங்கள் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

சிறந்த ஓவியர்கள் கொண்டு, இப்பணியை விரைந்து முடித்து, கற்பித்தல் பணிகளை துவங்குமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் கூறுகையில், ’அதிக மாணவர்கள் படிப்பதோடு, இடவசதி கொண்ட, அரசுப்பள்ளிகளில் மட்டுமே, சுவர் சித்திரங்கள் வரையப்படுகின்றன. இதற்கான, நிதி பள்ளிகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.

ஓவியங்கள் வரையும் பணிகள், முடியும் தருவாயில் உள்ளதால், தினசரி வகுப்பறையில் படங்கள் கொண்டு, உச்சரிப்பு பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’ என்றனர்.

No comments:

Post a Comment