FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

22 November 2017

பிச்சை எடுத்த முன்னாள் ஆசிரியை!: காப்பாற்றி அழைத்துச் சென்ற முன்னாள் மாணவர்கள்!

தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டி ஒருவர் பிச்சை எடுத்துவந்தார். கேரள மாநிலம், தாம்பனூர் ராயில்நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த உணவை அவர் எடுத்துத் திண்றப்பார்த்த பெண்மணி ஒருவருக்கு அதிர்ச்சி.
அந்த முதிய பெண்மணி, மலப்புரம் பள்ளியில் தான் படித்தபோது கணித ஆசிரியையாக இருந்தவர் என்பதை உணர்ந்தார்.
உடனடியாக அவருக்கு உணவு வாங்கி அளித்தார். அதோடு, தனது முன்னாள் ஆசிரியைக்கு நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார்.
தான் எடுத்த படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அது வைரலாகியது.
அந்த முன்னாள் ஆசிரியையின் மாணவர்கள் பலர் உதவ முன்வந்தனர். இப்போது ஆசிரியை பாதுகாப்பு இல்லத்தில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.
பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும், வளர்த்த பிள்ளைகள் (மாணவர்கள்) கைவிடவில்லை என்று நெகிழ்கிறார் அந்த முன்னாள் ஆசிரியர்

No comments:

Post a Comment