FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 November 2017

பள்ளி மாணவர்களுக்கு தனி பஸ் இயக்கம்

🍎 *பள்ளி மாணவர்களுக்கு தனி பஸ் இயக்கம் :*

🍏 *அமைச்சர் உறுதி*

🍑 *கரூர்:*

🌹 ''பள்ளி மாணவ, மாணவியருக்கென, தனி பஸ்கள் இயக்குவது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

🌹 *கரூரில், நேற்று அவர் அளித்த பேட்டி*

🌹சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

🌹 புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, ஏஜன்சிகள் மூலம், போக்குவரத்து விதிமுறைகள், வாகனம் ஓட்டும் முறைகள் குறித்து, பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

🌹சாலை பாதுகாப்புக்காக ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் என்பதை, 65 கோடி ரூபாயாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார்.

🌹 *வரும், 2020க்குள், விபத்துகளை பாதியாக குறைக்க திட்டமிட்டு செயல்படுகிறோம்.*

🌹 அரசு பஸ்கள் மூலம் ஏற்படும் விபத்துகளை குறைக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

🌹 *தரமான ஓட்டுனர்களை உருவாக்க திட்டமிட்டு, ஓட்டுனர் உரிமம் பெற, தமிழகம் முழுவதும், 14 இடங்களில், கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய பயிற்சி மையம், வட்டார போக்குவரத்து மையங்களில் அமைய உள்ளது.*

🌹பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க, அவர்களுக்கென, தனி அரசு பஸ்கள் இயக்குவது குறித்து, நீதிமன்ற ஆலோசனைப்படி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

🌹 *அதிகளவில் மாணவர்கள் செல்லும் வழித்தடங்களை கண்டறிய, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

🌹கரூரில் இருந்து, கோவை வரை, ஆறு வழிச்சாலை அமைக்கும் வகையில், நிலம் கையகப்படுத்த வருவாய் துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.

 இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment