FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 November 2017

வரைவு பாடத்திட்டம் : அவகாசம் நீட்டிப்பு

வரைவு பாடத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்ட வரைவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20ம் தேதி வெளியிட்டார். புதிய பாடத்திட்டம் 200 ஆசிரியர்கள் அடங்கிய குழுவினரால் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டம் வரும் ஜனவரியில் இறுதி செய்யப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரவுள்ளது.

1 முதல் 10 வகுப்புகளுக்கு 7 ஆண்டுகளுக்குப் பின்னரும், 11 மற்றும் 12வது வகுப்புகளுக்கு 14 ஆண்டுகளுக்குப் பின்னரும் பாடம் மாற்றியமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவும் அரசு தரப்பில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவ.27 ) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ புதிய பாடத்திட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிக்க கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் 7 நாட்கள் கால நீட்டிப்பு வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment