FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 November 2017

அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் சேமிப்பு கணக்கில் ஆதார் - செல்போன் எண் சமர்ப்பிக்க வேண்டும் தபால்துறை அறிவிப்பு

சென்னை வடகோட்டம் முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் க.குருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


இந்திய அரசு ஆணைப்படி அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதிக்குள் தபால் கணக்குகளுடன் ஆதார் மற்றும் செல்போன் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்திய தபால்துறை இதற்கான பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. 


எனவே இந்திய தபால்துறை சேமிப்பு வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களின் சுய கையெழுத்திட்ட ஆதார் அட்டையின் நகலில் (ஜெராக்ஸ்), செல்போன் மற்றும் தபால் கணக்கு எண்ணையும் குறிப்பிட்டு தாங்கள் சார்ந்திருக்கும் தபால் நிலைய அலுவலகத்திலோ அல்லது தபால்காரரிடமோ சேர்க்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment