FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 November 2017

அரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை தானம் வழங்கிய இன்ஜினியர்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெங்களூருவில் உள்ள இன்ஜினியர் கிருஷ்ணன் இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.

அவரை மக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். சாத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 220 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 1973ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி படிப்படியாக அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, பள்ளியின் கட்டடங்கள் சேதமடைந்து இடியும் தருவாயில் உள்ளது. கட்டடங்கள் கட்ட அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போதிய இடவசதி இல்லாததால் கட்டடம் கட்ட முடியாமல் உள்ளது. 

இதனையடுத்து இதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார்.பெங்களூருவில் இன்ஜினியராக பணி

புரியும் கிருஷ்ணன் கூறியதாவது: எனது சொந்த ஊர் சாத்தனுார். ஆண்டு தோறும் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியுள்ளோம். எங்கள் கிராமத்து இளைஞர்கள் பள்ளி கட்டடத்தை சீரமைத்து கொடுத்துள்ளனர்.

கூடுதல் கட்டடம் கட்ட போதிய இடவசதி இல்லாத நிலை குறித்து தெரியவந்தது. பள்ளிக்கு பின்புறம் எங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கி பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளேன். இதே போன்று அந்தந்த பகுதியில், வசிக்கும் வசதி படைத்தவர்கள் தங்களது கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு உதவ வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment