FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 November 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- இன்று 29.11.2017 தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்டக் கிளையின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல்-புதுச்சத்திரம் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களின் பேரியக்கமான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.








தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-
இன்று 29.11.2017 தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்டக் கிளையின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல்-புதுச்சத்திரம் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களின் பேரியக்கமான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வு இன்று 29.11.2017 மாலை நாமக்கல்லில் ஆசிரியரினப் போராளி செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் செ.முத்துசாமி Ex.MLC, பொதுச்செயலாளர் க.செல்வராஜு மற்றும் நாமக்கல் மாவட்டச் செயலாளர் இரா.செல்வக்குமார் ஆகியோருக்கு புதுச்சத்திரம் வட்டாரத்தின் மூத்த ஆசிரியர்கள் தங்கவேல், நடராஜன், ஜெயராஜ், சிவக்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் புதுச்சத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புதுச்சத்திரம் வட்டாரத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன், மாவட்டப்பொருளாளர் சுப்ரமணி, துணைத்தலைவர்கள் பொன்வீரசிவாஜி, நேரு, நாமக்கல் நகர, வட்டாரப் பொறுப்பாளர்கள் ஜெயச்சந்திரன், ஜஃபூர் அகமது, சண்முகம், பெரியசாமி, மோகனூர் சரவணன், இளங்கோ, பரமத்தி துரைசாமி ஆகியார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநிலத்தலைவர் செ.முத்துசாமி Ex.MLC, பொதுச்செயலாளர் க.செல்வராஜு புதியதாய் இணைந்தவர்களை வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்திப் பேசினர். 01.12.2017 வெள்ளி அன்று புதுச்சத்திரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒன்றிய ஆசிரியர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்து இணைப்பு விழா எடுப்பதென முடிவாற்றப்பட்டது. இதில் சங்கப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.
இங்ஙனம், க.செல்வராஜு, பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment