FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

14 August 2017

நல்லாசிரியர் விருதுக்கு கட்டுப்பாடுகள்

நல்லாசிரியர் விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளன.இந்திய மறைந்த ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மத்திய, மாநில அரசுகளின் சார்பில், தேர்வு செய்யப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், விருது வழங்கப்படுகிறது. 


இந்த ஆண்டுக்கான, நல்லாசிரியர் விருதுக்கான மாநில பட்டியல் தயாரிப்பு, ஒரு வாரத்திற்கு முன் துவங்கியுள்ளது. மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்யவும், விண்ணப்பிக்காத சிறப்பு ஆசிரியர்களைக் கண்டுபிடித்தும், பட்டியலில் சேர்க்க, தேர்வு கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி துறை இயக்குனர், இளங்கோவன், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதில், ஆறு வகை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


 அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க செய்தவராக இருக்க வேண்டும்

 வேலை நாட்களில் விடுமுறை எடுக்காமலும், பள்ளிக்கு தாமதமாக வராதவராகவும் இருக்க வேண்டும்

 பள்ளியின் சுற்றுப்புறம் மற்றும் கழிப்பறைகளின் துாய்மை பேண நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்

 மரக்கன்றுகள், தோட்டம் ஆகியவற்றை பராமரிப்பதில், அக்கறை கொண்ட வராக இருக்க வேண்டும்

 மாணவர்களின் கல்வித்திறனுடன், தனித்திறன் வளர்க்க உதவி இருக்க வேண்டும்

 அரசு விழாக்களில், பள்ளி மாணவர்களை பங்கேற்க செய்திருக்க வேண்டும்

இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment