FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 August 2017

பொது தேர்விற்கும் இனி ஆதார் எண்.. பள்ளிக் கல்வி துறை அதிரடி உத்தரவு

பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களின் ஆதார் எண்ணைச் சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பள்ளிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்தாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்னரே தேர்வு தொடங்கும் தேதி, முடியும் தேதி, முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றைப் பள்ளி கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதையடுத்து தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் பள்ளி கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.
இதற்காக பிரத்யேக படிவம் ஒன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை நிரப்பி பள்ளிகளில் வழங்க மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் படிவத்தில் ஆதார் எண், தந்தையின் செல்போன் நம்பர், மாற்றுத் திறனாளிகள் மாணவர் பற்றிய கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் பள்ளி கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு அவை கம்யூட்டரில் ஏற்றப்பட உள்ளன. இதனால் நடைமுறை சிக்கல் வெகுமாக குறைவதாகத் தேர்வு துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment