கரூர்: மின்வாரிய அலுவலகத்தின் வாடகை பாக்கியைக் கொடுக்க லஞ்சம் கேட்ட செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் குளித்தலை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டை மின்வாரிய வருவாய் அலுவலகத்துக்கு வாடகைக்குக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த அலுவலக நிர்வாகம் பல மாதங்களாக வாடகை கொடுக்காமலேயே இருந்து வருகிறது. இதனால், பாபு குளித்தலை கோட்ட செயற்பொறியாளர் தங்கவேலுவிடம் தனக்கு வாடகை பாக்கியாக ரூ.60,000 உள்ளது. அதைத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்குச் செயற்பொறியாளர் தங்கவேலு, வாடகை பாக்கி வேண்டுமானால் தனக்கு ரூ.2000 லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment