FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 August 2017

அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வருகிறது பள்ளிக்கூட பாதுகாப்பு கொள்கை...

கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தை தொடர்ந்து உருவாக்கப்பட்ட பள்ளிக்கூட பாதுகாப்பு கொள்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இந்த பாதுகாப்பு கொள்கை விதிமுறைகளை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கும்பகோணம் மற்றும் அரியானா மாநிலத்தில் தப்வாலா பள்ளிக்கூடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்துகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் உடல் கருகி பலியானார்கள்.
அதைத் தொடர்ந்து பள்ளிக்கூடங்களின் பாதுகாப்புக்கு வழிகாட்டும் விதி முறைகளுடன் புதிய பாதுகாப்பு கொள்கை வகுக்கும்படி கோரி, அவினாஷ் மெஹ்ரோத்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ‘பள்ளிக்கூட பாதுகாப்பு கொள்கை-2016’யை வகுத்துள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு கொள்கையின் வரைவு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக்கொண்ட அமர்வு, இந்த புதிய பள்ளிப்பாதுகாப்பு கொள்கையை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த கொள்கை திருப்தி அளிப்பதாகவும் நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.
இந்த கொள்கை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டு நீதிபதிகள் பொது நல வழக்கை முடித்து வைத்தனர்.
புதிய பாதுகாப்பு கொள்கையில் தீ தடுப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது

No comments:

Post a Comment