FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 August 2017

வேலை நிறுத்தம் நடக்குமா? : அரசு ஊழியர்கள் இன்று முடிவு

அடுத்த வாரம் துவங்க உள்ள, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.


அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ௭௩ சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த அமைப்பு, செப்., ௭ முதல், தொடர் வேலைநிறுத்தம் செய்ய முடிவு எடுத்திருந்தது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில், போராட்டம் நடத்தினால், அரசு தரப்பில் யாரும் பேச்சு நடத்த முன்வர மாட்டார்கள் என, தெரிகிறது. அதனால், போராட்டத்தை நடத்தலாமா அல்லது தள்ளிவைக்கலாமா என்ற குழப்பம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜாக்டோ - ஜியோ அமைப் பினர், இன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர்; சங்க நிர்வாகிகளிடம், இதுகுறித்து கருத்து கேட்கப்படுகிறது. அதன்பின், தொடர் வேலைநிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படும் என, ஆசிரியர், ஊழியர் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment