FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

24 August 2017

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு இன்று முதல்விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் டி.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஆகஸ்ட் 24(வியாழக்கிழமை) முதல் 31-ம் தேதி வரை (25 மற்றும் 27-ம் தேதி விடுமுறை நீங்கலாக) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்பிளஸ் 2 தேர்வெழுதியவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுதவும் (எச் வகையினர்), எஸ்எஸ்எல்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் இடைவெளியும் 1.10.2017 அன்று 16வயது மற்றும் 6 மாதம் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடி தனித்தேர்வர்களாக (எச்பி வகையினர்) தேர்வெழுதவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கல்வி மாவட்டங்கள் வாரி யாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் நேரில் சென்று விண்ணப்பத்தைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

சேவை மையங்களின் பட்டியலைத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்துகொள்ளலாம். ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50. எச் வகை தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50-ம், இதர கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். அதேபோல், எச்பி வகை தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணம் ரூ.150, இதர கட்டணம் ரூ.35, கேட்டல், பேசுதல், திறன் தேர்வுக்கு ரூ.2 ஆக மொத்தம் ரூ.187 செலுத்த வேண்டும். பார்வையற்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

செப்.25 தேர்வு தொடக்கம்;

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவுசெய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். ஒப்புகைச்சீட்டை தனித்தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். தனித்தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வெழுத வேண்டும். பிளஸ் 2 துணைத்தேர்வு செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 10-ம் தேதி முடிவடையும்.இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment