FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

19 July 2017

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள்– அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் -விரிவான செய்தி- தினந்தந்தி நாளிதழ்

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள்– அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

மாநில அரசின் எட்டாவது ஊதியக்குழுவினை அமல்படுத்துவதற்கு முன்னர் உடனடியாக 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், 1.4.2003–க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் அறிக்கையினை பெற்று, அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர அறிவிப்பினை வெளியிட வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை கரூர் மாவட்ட ஜாக்டோ மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேசுவதற்கு வசதியாக 2 சரக்கு வேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் முக்கிய நிர்வாகிகள் ஏறி நின்று பேசினர். ஆர்ப்பாட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோ‌ஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பொன்.செல்வராஜ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில மூத்தோர் அணி அமைப்பாளர் இருதயராஜன், நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கருணாகரன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் வேலுமணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர் பேசுகையில், எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்து கிளர்க் வேலை பார்ப்பவர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்கப்படுகிறது. இதனை எதிர்த்து தான் கடந்த முறை போராட்டம் நடத்தினோம் என அவர் பேசிக்கொண்டிருந்த போது, அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரது அருகே சென்று சூழ்ந்தனர். அவரது பேச்சுக்கு அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்தனர். அங்கிருந்த மற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசு ஊழியர்கள் சங்கத்தினரை சமாதானப்படுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


No comments:

Post a Comment