FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

21 January 2017

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறுகையில், காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலோர மாவட்டங்களில், இன்று லேசான மழையும், நாளை முதல் இரு தினங்களுக்கு, மாநிலம் முழுவதும் அனேக இடங்களில் நல்ல மழை பெய்யும்.

சென்னையைப் பொறுத்தவரை இரவில் பனியும், காலையில், மழையும் பெய்யும். கடலிலும், கடற்கரையிலும், மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். அதனால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment