FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

11 November 2016

பள்ளிகளில் கழிப்பறை வசதி எப்படி : விரிவான அறிக்கை கேட்கும் ஐகோர்ட்

தமிழக பள்ளிகளில் கழிப்பறை வசதி எப்படி உள்ளது, என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக பள்ளி கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:



பள்ளிகளில் கழிப்பறை வசதி எப்படி உள்ளது என்பது குறித்து, ப்ள்ளி கல்வித்துறை செயலர் தாககல் செய்த அறிக்கை போதிய அளவில் இல்லை. 44 லட்சம் மாணவர்களுக்கு 42 ஆயிரம் கழிப்பறைகள் எப்படி போதுமானதாக இருக்கும். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளி கல்வி செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வரும், 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

No comments:

Post a Comment