FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 July 2016

TNPTF மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்:

TNPTF மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்:

தீர்மானம்-1.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இயக்க இதழ் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மேற்கொள்வது எனவும், மாநிலச் செயற்குழு இல்லாத மாவட்டங்களில் மாவட்டச் செயலாளரே மேற்கொள்வது என முடிவாற்றப்பட்டது.

தீர்மானம்-2.
Cps மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மத்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் அறிவித்துள்ள செப்டம்பர்-2 அகில இந்திய வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பது என முடிவாற்றப்பட்டது.

தீர்மானம்-3. ஆசிரியர்களுக்கான இயக்க பயிற்சி முகாம்களை மண்டலம் வாரியாக செப்டம்பர் 26 & 27 ல் நடத்துவது என முடிவாற்றப்பட்டது.

தீர்மானம்-4.
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் உடனே நடத்தக்கோரி வருகிற 8/7/2016 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அனைத்து வட்டாரங்களிலும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவாற்றப்பட்டது.

தீர்மானம்-5
தனியார் பள்ளி ஒழுங்கு முறைச்சட்டம் திருத்தம் கோரி தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் நமது இயக்கத்தின் சார்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்தர் தலைமையில் துணைப்பொதுச் செயலாளர் திரு.மயில், மாநிலத் துணைத்தலைவர் திரு.ராஜா, மாநிலப் பொருளாளர் திரு.ஜீவானந்தம், வேலூர் மாவட்டச் செயலாளர் திரு.மணி, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் திரு.மேத்யூ, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு செல்வராஜ் ஆகியோர் அடங்கிய குழுவிற்கு மாநிலச் செயற்குழு ஒப்புதல் வழங்கியது.

தீர்மானம் 6
மாநிலப் பொருளாளர் சமர்ப்பித்த வரவு-செலவு அறிக்கையை இச்செயற்குழு ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழ்கியது.

துளிகள்:
) மாநில அலுவலகச் செயலாளராக திரு.நாகேந்திரன் நியமனம்.
)) cpsஐ எதிர்த்து நவம்பர் டெல்லி பாராளுமன்றம் நோக்கி பேரணி.
))) ஆகஸ்டு 12 அன்று STFIயின் 17வது நிறுவன நாளை தரமான கல்வி என்ற தலைப்பில் இயக்க கொடி ஏற்று கொண்டாடுதல்.
)))) பொறுப்பாக்கப்பட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்களை அழைத்துதான் மாவட்ட, வட்டாரச் செயற்குழு கூட்டங்களை நடத்த வேண்டும் என கராறாக மாநில மையத்தால் வலியுறுத்தப்பட்டது.

தகவல் பகிர்வு:
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை

No comments:

Post a Comment