FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

4 July 2016

Reality of 7th pay commission

7 வது ஊதியக் குழு பரிந்துரை 

7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.தர ஊதிய நடைமுறை அறவே கைவிடப்பட்டுள்ளது.குழு காப்பீட்டு நிதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

01.01.2016 முதல் பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்க அறிவித்துள்ளது.

ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு பற்றிய கணக்கீடுகள்

தற்போது பணியில் இருக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அவரவர் பெறும் அடிப்படை ஊதியத்தில் (Basic pay+Grade pay+pp) சேர்த்து 32 % த்தை பெருக்கினால் வருகிற தொகையினை புதிய ஊதியமாக வழங்கிட மத்திய அமைச்சரவை முடிவு செய்து அறிவித்துள்ளது. இந்த உயர்வு தற்போது அவரவர் பெறும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி 125 % சேர்த்து கணக்கிடும் போது 14.2 % சத உயர்வு வரும். ஒவ்வொருவரின் 01.01.2016ல் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியத்தினை கணக்கிட அவரவர் 01.01.2016ல் பெற்று வரும் அடிப்படை ஊதியத்தினை 2.57 % ஆல் பெருக்கினாலும் அதே உயர்வுதான் வரும்.அவ்வாறு கணக்கிடும் போது ஊதியம் குறைவாக இருந்தால் 7 வது ஊதியக் குழுவில் ஏற்பு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தொகை இடைநிலை ஆசிரியர்களுக்கு

ரூ 29200 (entry pay) ஊதியமாகும்.பணியில் மூத்தவருக்கு ஊதியம் குறைந்தாலும் ரூ 29200 லிருந்து ஊதியம் நிர்ணயம் செய்து சர்வீஸ் வெயிட்டேஜ் முறையில் கணக்கிட்டு ஊதியம் நிர்ணயம் செய்யும் பழைய முறையே அமல்படுத்துவார்கள் என அறிகிறோம்.ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் மேற்காணும் நடைமுறையே பொருந்தும்.

குறைந்தபட்ச ஊதியம் 26,000 நிர்ணயம் செயதிட சங்கங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியது.மத்திய அரசு 18,000 மட்டுமே என்று அறிவித்துள்ளது. அடிபிறழாமல் ஊதியக் குழு பரிந்துரையை ஏற்பு செய்ய 6 மாத காலம் அவகாசம் எடுத்துக்கொண்டது தேவையில்லை. ஆனால் மத்திய அரசு 6 மாதத்திற்குள் வழங்கியுள்ளதாக பெருமிதம் கொள்வதை உணர முடிகிறது.03.07.2016 ல் கொல்கத்தாவில் கூட உள்ள ஐபெட்டோவின் தேசிய செயற் குழுவில் இது தொடர்பாக முக்கிய முடிவெடுத்து அறிவித்திட உள்ளோம் என்பதை தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறோம்.

(நாளேடுகளில் 23.5 % ஊதிய உயர்வு என்பது பொருத்தமில்லாத செய்தியாகும்.23.5 % ஊதிய உயர்வு என்பது பெருநகரங்களில் பணிபுரிவோர் பெறுகின்ற இதர படிகள் சேர்த்து கணக்கிடும் முறையாகும்)

No comments:

Post a Comment