FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 July 2016

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ராம மோகன ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.என்.ஹரிஹரன் கோவை மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்படுகிறார். சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் சந்திரமோகன், வருவாய்த்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை வெங்கடேசன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.

பட்டுப்புழு வளர்ப்பு துறை இயக்குனர் சாந்தா, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தொல்லியல், கலை மற்றும் கலாச்சாரத் துறை ஆணையர் கார்த்திகேயன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நுகர்பொருள் வாணிபக் கழக பொது மேலாளர் பாஸ்கரன் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment