FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 July 2016

அரசு ஊழியர்கள் மீது லஞ்சப் புகார் குறித்த தமிழக அரசின் அரசாணை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அரசு ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார் குறித்த தமிழக அரசின் புதிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.n



அரசு ஊழியர்கள் மீது ஊழல் புகார் வந்தால் அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்தது.


இதனை எதிர்த்து புகழேந்தி தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தமிழக அரசின் புதிய அரசாணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment