FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 June 2016

உள்ளாட்சி தேர்தலுக்குள் முன்பாக மகப்பேறு விடுப்பு உயர்வு ?

          உள்ளாட்சி தேர்தலுக்கு முன், மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதமாக அறிவிக்க, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதிகாரிகள், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். 

          அரசு துறைகளில் பணிபுரியும் பெண்கள், தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, தற்போது, ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை யில், 'மகப்பேறு கால விடுப்பு, ஒன்பது மாதமாக உயர்த்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அ.தி.மு.க., அரசு, பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை, ஒன்பது மாதங்களாக உயர்த்தி அறிவிக்க உள்ளது. இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதிகாரிகள், கடந்த சில நாட்களாக ஆலோசனை மேற்கொண்டனர். முடிவில், பெண்களின் ஓட்டுகளை கவர, உள்ளாட்சி தேர்தலுக்கு முன், இதை அமல்படுத்தும்படி, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

No comments:

Post a Comment