FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

8 June 2016

சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விபத்தில் உயிரிழப்புக்கு ரூ.1 லட்சம், விபத்தால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ.15 ஆயிரம் மற்றும் கல்வி உதவி, மகப்பேறு உதவி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நலவாரியத்தில் பதிவு செய்ய, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர் என்பதற்கான சாதிச்சான்று மற்றும் குடும்ப அட்டை நகலுடன் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment