FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 June 2016

புதிய கல்வி கொள்கை: மாநிலங்களின் கருத்துகள் பெறப்பட்ட பிறகே இறுதி முடிவு- ஸ்மிருதி இரானி

புதிய கல்வி கொள்கையை வகுப்பது தொடர்பாக மாநிலங்களின் கருத்துகள் பெறப்பட்ட பிறகே மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 1986-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பள்ளி மற்றும் உயர்கல்வி குறித்த புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. அதன்பின் வந்த அரசுகள், அதில் திருத்தங்கள் மட்டுமே செய்துவந்தன.
இந்நிலையில், தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, முன்னாள் மத்திய அமைச்சரவை செயலர் டிஎஸ்ஆர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. இதில், என்.சி.இ.ஆர்.டி., தலைவர் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். இந்த கமிட்டி தனது அறிக்கையை, சமீபத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
அதில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காணப்பட்ட 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற முறையை மாற்றி 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே அனைவரும் தேர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை கூறியதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட பலரிடமும் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பரிந்துரை கேட்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தரப்பின் கல்வி நிபுணர்களும் தங்களது பரிந்துரைகளை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் அளித்து வந்துள்ளனர்.
இதன் அடிப்படையில், புதிய கல்விக்கொள்கையை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதை வெளியிடும் முன், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து பரிந்துரைகளை பெற்ற பின்பே, புதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment