FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 June 2016

ஓபிசி பிரிவினருக்கான "கிரீமிலேயர்' வரம்பு உயர்கிறது?

இதர பிற்படுத்தப்பட்டோரில் (ஓபிசி) வசதியானவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் விலக்கு அளிக்கும் வருமான வரம்பை தற்போதுள்ள ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8.50 லட்சமாக உயர்த்த மத்திய பாஜக அரசு உத்தேசித்துள்ளது.


 இதர பிற்படுத்தப்பட்டோரில் வசதியானவர்கள், ஏழைகள் என்று தனியாக அடையாளம் காண்பதற்காக "கிரீமிலேயர்' என்ற முறையை மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசு கடந்த 1993இல் அமல்படுத்தியது. இதன்படி, ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் மற்றும் அதற்கும் கூடுதலாக இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு பெற முடியாது. இந்நிலையில், இந்த வருமான உச்ச வரம்பை ரூ.8.50 லட்சமாக உயர்த்துவது என்று மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைச்சகங்களுடன் கலந்தாலோசனை செய்த பிறகே மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கிரீமிலேயருக்கான உச்சவரம்பை நாங்கள் இறுதிசெய்துள்ளோம். அது ரூ.8.25 லட்சத்தில் இருந்து ரூ.8.50 லட்சத்துக்குள் இருக்கும்'' என்றார். 

 இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமும், மத்தியப் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையும் உரிய உத்தரவுகளை மத்திய கல்வி நிலையங்களுக்கும் அரசுத்துறைகளுக்கும் பிறப்பிக்கும். இந்த வருமான உச்சவரம்பின் மூலம் ஓபிசி பிரிவைச் சேர்ந்த மேலும் பலருக்கும் இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment