FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 June 2016

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஆகஸ்டு மாதம் தேர்தல்?

அரவக்குறிச்சி தொகுதி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஆகஸ்டு மாத கடைசி வாரத்தில் தேர்தல் நடத்தலாமா? என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. 

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையின்போது கோடிக்கணக்கில்பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பிடிபட்டதால் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த இரு தொகுதிகளிலும் தேதி குறிப்பிடாமல் பின்னர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.புதிய தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர் சீனுவேல் உடல்நலக்குறைவு காரணமாக மே.25 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதையடுத்து திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் நடத்தலாம் என்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.அடுத்த மாதம் (ஜூலை) நிதிநிலை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மற்றும் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. இதனால் குறைந்தது 35 நாட்கள் வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் ஜூலை மாதம் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த முடியாது என்பதால் 3 தொகுதிக்கும் ஆகஸ்டு மாதம் கடைசி வாரத்தில் தேர்தல் நடத்தலாமா? என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.இந்த முறை அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் போது பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு அதிரடி சோதனை நடத்துவது குறித்தும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment