FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

4 June 2016

8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்

எட்டாம் வகுப்பு கல்விக்குப் பிறகு தொழில்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்ந்து படித்து முடித்தால், அவர்களின் கல்வித் தகுதி 10ஆம் வகுப்புக்குச் சமமானதாக இனி மதிக்கப்படும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தேசியத் திறன் கவுன்சிலின் முதலாவது ஆலோசனைக் கூட்டம், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இக்கூட்டத்தில், எட்டாம் வகுப்பு கல்விக்குப் பிறகு, ஐடிஐயில் சேர்ந்து மாணவர்கள் தொழில்கல்வி படித்து முடித்தால், அவர்களுடைய கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு முடித்ததற்கு சமமானதாக எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம், மாணவர்கள் தங்களது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை தொழில் கல்வி பயின்ற பிறகும் தொடர முடியும். அதேபோல், 10ஆம் வகுப்புக்குப் பிறகு, தொழில்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித் தகுதி 12ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமமானதாக எடுத்துக் கொள்ளப்படும் என்றார் தேவேந்திர பட்னவீஸ்.

No comments:

Post a Comment