FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

6 June 2016

இன்னும் 48 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவமழை தொடங்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் இன்னும் 48 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் சென்னை மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா சில தினங்கள் முன்பு கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக, தஞ்சையில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கும்பகோணத்தில் 5 செ.மீ மழையும், வேதாரண்யம், செட்டிகுளத்தில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
கோத்தகிரி, மானாமதுரை, தளி, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கேரளாவில் இன்னும் 48 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மாலை, அல்லது இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய கன மழையோ பெய்யக்கூடும். இவ்வாறு வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment