FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 June 2016

புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத்தேர்வு முடிவுகள் 13-ஆம் தேதி வெளியீடு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்வு முடிவுகள் வருகிற 13-ஐம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி, காரைக்காலில் உள்ள கிளை கல்லூரிகளுக்கு என 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில், புதுச்சேரி கல்லூரியில் 40 இடங்களும், காரைக்காலில் 14 இடங்களும், புதுவை மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. மற்ற இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. காலை 10 மணியிலிருந்து 12.30 மணி வரையிலும், மாலை 3 மணியிலிருந்து 5.30 மணி வரையிலும் 2 கட்டங்களாக இந்த தேர்வு நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் 9 மையங்களில் சுமார் 3,098 பேரும், சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், தில்லி உள்ளிட்ட இதர 75 நகரங்களில் உள்ள 270 மையங்களில் சுமார் 1,55,193 பேர் இந்த நுழைவு தேர்வை எழுதி வருகின்றனர்.
இதனிடையே, ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்வு முடிவுகள் வருகிற 13-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். அதன்பின்னர் மாணவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment