FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 June 2016

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் ஜூன் 12ல் வெளியீடு

புதுடில்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், சுயாட்சி அமைப்பாக செயல்படும் ஐ.ஐ.டி.,க்களில், இன்ஜி., படிப்பில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்கு, இரண்டு கட்டமாக முதன்மை மற்றும், 'அட்வான்ஸ்டு' ஆகிய தேர்வுகள் உள்ளன.

இதில், முதன்மை தேர்வு முடித்தவர்களுக்கு, மே, 22ல் அட்வான்ஸ்டு தேர்வுகள் நடந்தன. இதற்கான முடிவுகள், ஜூன் 12ம் தேதி வெளியாகும் என, தெரிகிறது. இந்நிலையில், விடைத்தாள் நகல்கள், நேற்று http:/www.jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. வரும், 4ம் தேதி மாலை 5:00 மணி வரை, தேர்வர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment