FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

31 May 2016

வாக்காளர் பட்டியல் குறை நீக்கும் பணி:விரைவில் துவக்க தேர்தல் கமிஷன் முடிவு

''வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணி, விரைவில்துவக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இணையதளம் மூலம்...இதுகுறித்து லக்கானி நேற்று கூறியதாவது: 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, இணையதளம்மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆர்.டி.ஓ., மற்றும் மாநகராட்சிமண்டல அலுவலகங்களில் நேரில் விண்ணப்பம்அளிக்கலாம்.வாக்காளர் பட்டியலில், ஒருவருடைய பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளதாக, தொடர்ந்து புகார் எழுகிறது. எனவே, வாக்காளர் பெயர், அவரது தந்தை பெயர், வயதுஆகியவை ஒன்றாக இருக்கும் பட்டியலை தயார் செய்து, ஒரே நபராக இருந்தால், அவரது பெயர், ஒரு இடம் தவிர மற்ற இடங்களில் இருந்து அகற்றப்படும். 

தேர்தல் தொடர்பாக, வழக்கு தொடர விரும்புவோர், ஓட்டு எண்ணிக்கை முடிந்து, 45 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அதுவரை, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்அப்படியே வைக்கப்பட்டுஇருக்கும். தேவைப்பட்டால்...அதன்பின், வழக்கு உள்ள தொகுதி தவிர, பிற தொகுதிகளில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வேறு மாநிலங்களுக்கு தேவைப்பட்டால்அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment