FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 May 2016

நரிக்குறவர், குருவிக்காரர்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்க சட்ட திருத்த மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி :நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும் பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்கூடிய மத்திய அமைச்சரவைக் குழுவில், பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும்பழங்குடியினரை (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment