FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

31 May 2016

கரூரில் டீக்கடையில் கிடைக்கிது இலவச 'வைபை' :அலைமோதும் கூட்டம்

கரூர், : கரூரில் உள்ள டீக்கடையில், 'அன்லிமிடெட்' இலவச வைபை வசதி அளிப்பதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகத்தில், ஸ்டார் ஓட்டல், மால்கள் உள்ளிட்ட இடங்களில், இலவச வைபை (கம்பியில்லா இணைய சேவை) வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கூட, அந்த நிறுவனங்களிலிருந்து பாஸ்வேர்ட் (ரகசிய எண்) பெற்ற பின் தான், வாடிக்கையாளர்கள் இணைய சேவையை பயன்படுத்த முடியும். ஆனால், அன்லிமிடெட் வைபை வசதியை, கரூர் அடுத்த, ராயனூரில் உள்ள டீக்கடை, வாடிக்கையாளர்களை கவர, நூதனமாக வழங்கி அசத்தி வருகிறது. இதுகுறித்து, கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: லாரி டிரைவர் பணியிலிருந்து விலகி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் டீக்கடை துவங்கினேன். இருப்பினும், கடை புறநகர் பகுதியில் இருப்பதால், சாலையில் செல்வோர் மட்டும் வந்துசென்றனர்.கடையில் எப்போதும் கூட்டம் இருந்தால் தான், அதிக வாடிக்கையாளர்கள் வருவர் என்ற உத்தியை கையாள துவங்கினேன்.
சுற்று வட்டார பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் அதிகம் இருப்பதால், அங்குள்ள பெரும்பாலான இளைஞர்கள், ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். அவர்களை கவர, இலவசமாக வைபை வசதி அளிக்க துவக்கினேன்.
இதனால், இளைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. இந்த சேவைக்கு மாதந்தோறும், 1,500 ரூபாய் கட்டணம் செலுத்துகிறேன். கடையில் தொழிலாளர்கள் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களே வேலை செய்வதால், இந்த கட்டணம்கட்டுப்படியாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment