FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 May 2016

மருத்துவ காப்பீட்டில் மாற்றம் தேவை - அரசு ஊழியர் கோரிக்கை-தினமலர்

வேடசந்துார்: ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவ மனைகளில், கூடுதல் கட்டணம் வசூல் செய்வதால் திட்டத்தில் மாற்றம் தேவையென கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு 1,7.2012 முதல் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் 30.6.2016 ல் முடிவுக்கு வர உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பணிபுரியும் 12 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்திற்காக ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் மாதம்தோறும் ரூ.150 வீதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் நான்கு ஆண்டுகளில், ரூ.4 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சையை ஊழியர்களும், அவரது குடும்பத்தாரும் பெறலாம். யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பெனி, தமிழ்நாடு அரசு இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்வோரிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றனர். இன்சூரன்ஸ் நிதிக்கு மேல் கூடுதல் வசூல் செய்வதாக ஊழியர்கள் குமுறுகின்றனர். இதற்கு அரசே இத்திட்டத்தை நேரடியாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசிரியர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது; இத்திட்டத்தை தனியாரிடம் ஒப்பந்தம் செய்துள்ளதால், கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் இல்லா சிகிச்சை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment