FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 May 2016

பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பா?

         தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை பல்வேறு தேதிகளில் திறக்கப்படுகின்றன.


           சில நாட்களாக தமிழகத்தில் பல நகரங்களில் வெயில் 38 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது.எனவே, பள்ளிகளின் கோடை விடுமுறையை, ஜூன் 8ம் தேதி வரை நீட்டிக்க, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். ஆசிரியர்களும், இதே கருத்தை வலியுறுத்தி, கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவிடம் மனு அளித்துள்ளனர். எனவே, கோடை விடுமுறையை நீட்டிப்பது குறித்து, அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 
              பள்ளிக்கல்வி செயலர் சபிதாவிடம் கேட்ட போது, ''பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுவது குறித்து, இன்னும் கல்வித் துறை எந்த முடிவும் எடுக்கவில்லை. முடிவுகள் எடுத்தால், அதை ஊடகங்கள் வாயிலாக உடனடியாக தெரிவிப்போம்,'' என்றார்.

No comments:

Post a Comment