FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 May 2016

பத்தாம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள்.. மாநிலத்தில் முதலிடம் பிடித்த பிரேமசுதா, சிவகுமார்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இருவர் முதலிடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் மாணவர் மற்றொருவர் மாணவி.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர்.
தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. விருதுநகர் மாவட்டம், நோபல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் ஆர்.சிவக்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், எஸ்ஆர்வி எக்சல் பள்ளி மாணவி பிரேம சுதா ஆகியோர் தலா 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர்.
498 மதிப்பெண்களுடன் 50 மாணவ, மாணவியர் 2வது இடம் பிடித்தனர். 497 மதிப்பெண்களுடன் 244 பேர் 3வது இடத்தைப் பிடித்தனர்.

No comments:

Post a Comment