FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 May 2016

வீடுகளில் 100 யூனிட் இலவச மின்சாரம்: இரு மாதத்திற்கு ரூ.350 மட்டும் மிச்சம்

வீடுகளில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம், இரண்டு மாதங்களில், 500 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், 350 ரூபாய் மட்டும் மிச்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், 
* 0 - 100 யூனிட் 
* 0 - 200 யூனிட் 
* 201 - 500 யூனிட் 
* 500 யூனிட் மேல் என்ற பிரிவுகளில், இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை கட்டணம் வசூலிக்கிறது. கு றிப்பாக, 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்படும் வீடுகளில், மூன்று வகையாக கட்டணம் கணக்கிடப்படுகிறது. 

அதன்படி, 

* முதல், 200 யூனிட் மின்சாரத்திற்கு, 1 யூனிட், 3.50 ரூபாய் 
* அடுத்த, 300 யூனிட்டிற்கு, 1 யூனிட், 4.60 ரூபாய் 
* அதற்கு மேல், 1 யூனிட்டிற்கு, 6.60 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், 'வீடுகளில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று, மே, 23ல், மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும், 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் கையெழுத்திட்டார். 

இந்த திட்டத்தின் மூலம், இரண்டு மாதங்களுக்கு, 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில்,350 ரூபாய் மிச்சமாக உள்ளது.இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'வீடுகளில், 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால், கட்டணம் கிடையாது; 500 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்தினால், 200 ரூபாயும்; அதற்கு மேல் பயன்படுத்தினால், 350 ரூபாயும் மிச்சமாகும்' என்றார்.

No comments:

Post a Comment