FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 April 2016

வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்)

வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும்
வாக்குபதிவுக்கு முந்தையநாள் பகல் 12 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிக்கு சென்றடையும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
வாக்குசாவடியை சென்றடைந்த உடன் அங்குள்ள அடிப்படை வசதிகள் மற்றும் வாக்குபதிவு நடத்த தேவையான உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இதற்காக வாக்குசாவடி நிலை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோரின் உதவியை கேட்டுப்பெற வேண்டும்.
வாக்குபதிவுக்கு தேவையான தேர்தல் பொருட்களை மண்டல அலுவலர் ஒப்படைக்கும்போது பட்டியலின்படி வாக்குபதிவு இயந்திரங்கள், குறிப்பிடப்பட்ட வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பொருட்களும் தனது வாக்குசாவடிக்கு உரியதுதானா என்பதை சரிபார்த்து பெற்றுக்கொண்டு அதற்கு ஒப்புகை ரசீது வழங்க வேண்டும்.
வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் தங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ள வாக்குசாவடியின் அமைவிடம் மற்றும் வழித்தடம் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும்

No comments:

Post a Comment