FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 April 2016

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?

          பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 23ல் முடிந்தது. 

       மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பிளஸ் 2 மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, சென்னையிலுள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இன்னும், இரு தினங்களில் மதிப்பெண் தொகுப்பு பணி முடிந்து, மாவட்ட வாரியாக முதலிடம்; மாநில வாரியான, 'ரேங்க்' எடுத்த மாணவ, மாணவியரின் பட்டியல் தயாரிக்கப்படும். 'சென்டம்' எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும். 
இந்த பணிகள், ஏப்., 29ம் தேதிக்குள் முடிந்து விட்டால், மே, 2ம் தேதியே தேர்வு முடிவு வெளியிடப்படும். இதில் தாமதமானால், மே, 5ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment