1. தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கேமரா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
2. மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் 3ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு துவங்கி 2 மணி நேரத்தில் 18% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 18 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
4. சென்னையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. தினந்தோறும் 20 லட்சம் பாக்கெட்டுகளில் இதுபோன்ற வாசகங்கள் அச்சடித்து வழங்கப்பட உள்ளன.
5. சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ஐதராபாத்தில் உள்ள ஆந்திர-தெலுங்கானா மாநில ஐகோர்ட்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
6. உலகளாவிய ரீதியில் நடைபெறும் 16 ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டினை இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
7. மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 25-ந் தேதி வரை நடக்கிறது.
8. லண்டனுக்கு செல்கிறவர்கள் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று மேடம் துசாட்ஸ் மியூசியம். அங்கு உலக பிரசித்தி பெற்ற தலைவர்கள், பிரபலங்களின் அச்சு அசல்t மெழுகு சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன.அந்த பிரபலங்களின் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியும் இடம் பெற்றார். உலகளவில் மிகவும் பிரபலமாக விளங்கும் மோடியின் மெழுகு சிலையை வைக்க திட்டமிட்ட அருங்காட்சியகம், இதற்காக அண்மையில் பிரதமர் மோடியை அளவு எடுத்துச்சென்றது. தற்போது மோடியின் மெழுகு சிலை தயாரிக்கும் பணி நிறைவு பெற்றதையடுத்து, வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது.
9. சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்பிரி கோல்டு பேட்மிண்டன் தொடர் குவாங்சூவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் நட்சுகி நிடாய்ராவை வீழ்த்தினார்.
10. Goa Government has decided to appoint former Chief Justice of Patna High Court Justice P.K.Mishra as Lokayukta of the state.
11. 1926 ஏப்ரல் 21, இரண்டம் எலிசபெத் ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி பிறந்த தினம் இன்று.
12. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள 7 தொகுதிகள் உள்பட மொத்தம் 62 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
13. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வாயிலாக இந்தியாவுக்கு கிடைக்கும் வருவாயைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் பிசிசிஐ-யின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
14. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சாட்டை வெள்ளரிக்காய் வரத்து அதிகரித்திருப்பதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வெள்ளிரிக்காய் ஒரு கிலோ (10 முதல் 13 காய்கள்) சில நாள்களுக்கு முன்பு ரூ.25-க்கு விற்பனையானது. தற்போது வரத்து அதிகரித்து இருப்பதால் ஒரு கிலோ ரூ.15 ஆக குறைந்துள்ளது.
15. விஜயகாந்த் நாமக்கல் வந்த நாளில், சேலத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நாமக்கல்லைச் சேர்ந்த தேமுதிக வழக்குரைஞர் எஸ்.கே.வேல் அதிமுகவில் இணைந்தார்.
16. பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதை முற்றிலுமாகத் தடுக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டுமென்று ஐ.நா.வில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.
17. பிஎப் உத்தரவை எதிர்த்து ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதை யடுத்து, பெங்களூர் மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊரகப் பகுதியில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
18. இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்.
19. தனது பணி நியமனத்திற்கான ஆணையில் துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்படவில்லை எனக் கூறி, ஆம் ஆத்மி அரசால் நியமிக்கப்பட்ட திகார் சிறை டிஜி ஜே.கே.சர்மா பதவியேற்ற மறுநாளே பதவி விலகினார்.
20. சேலத்தில் நேற்று நடந்த ஜெயலலிதா பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக தொண்டர்கள் 2 பேர் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மேலும் பெண் எஸ்ஐ உள்ளிட்ட 3 பேர் மயக்கமடைந்தனர்.
21. சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை, ஹெளராவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ரயில் எண் 01064: மே 2, 9-ஆம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.15 மணிக்கு மும்பை சிஎஸ்டி சென்றடையும்.
22. பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நிஷிகோரி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
23. நாட்டிலேயே முதல்முறையாக மும்பை-ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே விடப்பட இருக்கும் புல்லட் ரயில், மகாராஷ்டிர மாநிலம், தாணே கிரீக் அருகே கடலுக்கு அடியில் பயணிக்க இருக்கிறது.
24. மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் சட்டப் பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார்.
25. In recently released 2016 World Press Freedom Index (WPFI), India ranked 133rd out of 180 nations surveyed worldwide in terms of press freedom in 2015.
26. வட மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சாட் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா பாசியின் பெயரை அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார்.
27. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முதல் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ராகுல் ஜோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
28. சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்ட பத்திரிகையாளர் சோ ராமசாமி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
29. ஈக்வடார் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்தது.
30. தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்திருப்பதால் சூரியசக்தி மூலம் ஒரே நாளில் 633 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
31. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில், நியூயார்க்கில் ஹிலாரியும், டிரம்பும் அபார வெற்றி பெற்றனர்
32. ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதற்காக ஹாங்காங் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் இர்ஃபான் அஹமதுக்கு இரண்டரை ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
33. தமிழகத்தில் தேமுதிக ஆட்சிக்கு வந்தால், முதியோர் உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
34. குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று (ஏப்.20) வெளியிட்டது. அதன்படி, 4 ஆயிரத்து 33 பேர் பிரதானத் தேர்வினை எழுத தகுதி படைத்துள்ளனர். பிரதானத் தேர்வு ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது.
35. மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சி நிலவி வருவதால் அங்கிருந்து ஐபில் போட்டிகளை மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வரும் மே 1-ஆம் தேதி புணே-மும்பையிலான ஆட்டத்தை மட்டும் புணேவில் நடத்துவதற்கு பிசிசிஐ அனுமதி கேட்டிருந்தது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
36. ரோஹித், போலார்ட் அதிரடி; மும்பைக்கு 2-ஆவது வெற்றி
37. சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்ட பத்திரிகையாளர் சோ ராமசாமி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
38. நியூயார்க் : ''போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத கட்டமைப்புக்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை, சர்வதேச சமுதாயம் தீவிரப்படுத்த வேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தி உள்ளார்.
39. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் நியூயார்க்கில் ஹிலாரி, டிரம்ப் அமோக வெற்றி
40. கடந்த 2 ஆண்டுகளில் 4வது முறையாக வரும் ஜூனில் மோடி அமெரிக்கா செல்கிறார்
41. மேற்குவங்கத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது: பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர்

No comments:
Post a Comment