FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 April 2016

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அனைத்து மொபைல்களிலும் அவசர உதவி பட்டன் கட்டாயம்

புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் எச்சரிக்கை பட்டன் வசதி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தொழில் நுட்பம் மனித வாழ்க்கையை மேம்படுத்துகிறது. அதேநேரத்தில் மகளிர் பாதுகாப்புக்கு இது எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த வகையில், 2017 ஜனவரி 1ம் தேதி முதல், அவசர உதவி பட்டன் இல்லாமல் எந்த மொபைலும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட கூடாது. இதுபோல் 2018 ஜனவரி 1ம் தேதியில் இருந்து விற்கப்படும் மொபைல் போன்களில் ஜிபிஎஸ் வசதி இருப்பதும் கட்டாயம் ஆக்கப்படுகிறது.

ஜிபிஎஸ் வசதி அல்லாத சாதாரண போன்களாக இருந்தாலும் அவற்றில் 5 அல்லது 9ம் எண் பட்டன்கள் அவசர உதவி அழைப்புக்கானதாக ஒதுக்கப்பட வேண்டும். மொபைல் போன்களை ஆன் அல்லது ஆஃப் செய்ய சில நொடிகளுக்கு நீண்ட நேரம் அழுத்துவதுபோல, இந்த அவசர உதவி பட்டன்களை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் அழைப்பு செல்வதுபோல் அமைக்க வேண்டும். அல்லது அதே பட்டனை மூன்று முறை தொடர்ந்து அழுத்துவதன் மூலமாகவும் அழைப்பு செல்வதுபோல் அமைக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment