FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 December 2015

இனிமேல் செல்போன் டேட்டாவை காலி செய்ய காலக்கெடு கிடையாது; ஏர்டெல் அதிரடி

நம் நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் தங்களது இணையதள சேவைக்காக செய்துகொள்ளும் ரீசார்ஜ்ஜுகளுக்கு வேலிடிட்டி எல்லை கிடையாது என்று தெரிவித்துள்ளது.


உதாரணத்திற்கு, 1 ஜிபி டேட்டா பயன்படுத்த வாடிக்கையாளர் ஒருவர் ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்குள் இணையதள டேட்டாவை காலி செய்தாக வேண்டிய கட்டாயம் முன்பு இருந்தது. ஆனால், இனிமேல் டேட்டாவை காலி செய்ய காலக்கெடு கிடையாது. உபயோகம் செய்து டேட்டா காலியான பிறகு ரீசார்ஜ் செய்தால் போதும்.
தற்போது இந்த திட்டம் 5 வகை பிளான்களுடன் டெல்லி மற்றும் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment