FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

30 December 2015

இன்றைய கல்வி பார்வை: வசமாக வேண்டுமா வெற்றி!

நாம் பெறுகின்ற வெற்றியில், அறிவுக் கூர்மை முக்கிய பங்கு வகிக்கிறது. யாராவது ஒருவர் எதிலாவது வெற்றி பெற்றால், அவர் அறிவுக்கூர்மை உடையவர் என்று அனைவரும் நினைப்பதுண்டு.

ஒருவருக்கு அறிவுக்கூர்மையில் தடை ஏற்பட்டால், அவருக்கு வெகுமதியாக கிடைப்பது, அவமானங்கள் மட்டுமே. அப்படியென்றால் அறிவாளிகள் தான் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கான விடையை, வேறு வித கண்ணோட்டத்துடன் பார்க்கலாம்.

சராசரி அறிவுக் கூர்மை உடையவர், ஒரு செயலில் ஈடுபடும் போது பயம் மற்றும் சந்தேகத்துடன் இறங்கினால் வெற்றி பெறுவாரா அல்லது சராசரி அறிவுக்கூர்மை உடையவர், ஒரு செயலில் ஈடுபடும் போது நேர்மறையான கண்ணோட்டத்துடன் இறங்கினால் வெற்றி பெறுவாரா. இந்த கேள்விகளை ஆராய்ந்தாலே போதும். யார் ஒருவர் நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறார்களோ அவருக்கே வெற்றி வசமாகும்.

அதே சமயத்தில் உங்களது பணியில் அறிவுக்கூர்மை முக்கிய பங்காற்றுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் உங்களது பணி, ஒரு எல்லைக்கு உட்பட்டது. அதனால் தான், அதிக மக்கள் நேர்மறையான சிந்தனையே, வெற்றிக்கு வழி வகுக்கிறது என்பதை அறிந்து வைத்திருக்கின்றனர். திறமை, அறிவு, செயல்திறன்கள் உள்ளிட்ட அனைத்தும் இரண்டாம் பட்சம் தான் என்பதை உணர வேண்டும்.

ஆகவே, எந்த செயலிலும் நேர்மறையான சிந்தனையோடு செயல்பட்டு வெற்றியை அடையுங்கள்.


No comments:

Post a Comment