FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

31 December 2015

ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மார்ச் 31 வரை நீட்டிக்க வாய்ப்பு

ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மார்ச் 31-ம் தேதி நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு, அரசு நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடையும் நோக்கில் ஆதார் எனப்படும் தேசிய அடையாள அட்டைகளை வழங்க மத்திய அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவு எண்களை வழங்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



இந்த முகாம்களில் இதுவரை 6 கோடியே  34 லட்சம் பேருக்கு பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகைகள், விழித்திரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்முகாம்கள் வரும் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்ககம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment